அஜித்தின் மச்சினருடன் பிஸி! பிரபல சீரியலில் இருந்து வெளியேறி நடிகை தர்ஷா குப்தா.

cookwithcomali2 dharshagupta
By Edward Aug 07, 2021 03:30 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மளரும் என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதில் ஆரம்பித்த தர்ஷா ஓரளவிற்கு தான் பேசப்பட்டார். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிறிசி, டிக்டாக், போட்டோஹூட் போன்ற புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டார்.

இதனால் ரசிகர்களை ஈர்த்து வந்த தர்ஷா பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாக குக்வித் கோமாளி சீசன்2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். புகழுடன் சேர்ந்து அவருடன் ரொமான்ஸ் செய்து மக்கள் மனதை ஈர்த்த தர்ஷா இடையில் அதே தொலைக்காட்சியில் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து வந்துள்ளார்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியால் நடிகர் அஜித்தின் மச்சினர் ரிச்சர்ட் ரிச்சியுடன் திரெளபதி பட இயக்குநரின் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமும், தர்ஷா கர்ப்பமாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் மற்றொரு படத்தில் தர்ஷா குப்தா கமிட்டாகி இருப்பதால் சீரியலில் கவனம் செலுத்த முடியாமல் போகிறதாம்.

அதனால் செந்தூர பூவே சீரியலில் இருந்து விலகியுள்ளார் தர்ஷா. படவாய்ப்பிற்காக காட்டிய க்ளாமர் தற்போது வீண் போகவில்லையே என்று சிலர் கூறி வருகிறார்கள்.

அஜித்தின் மச்சினருடன் பிஸி! பிரபல சீரியலில் இருந்து வெளியேறி நடிகை தர்ஷா குப்தா. | Dharsha Gupta Going To Leave From Senthurapoove