விவாகரத்து செய்து இரண்டாம் கல்யாணமா? மனைவியுடன் சண்டையை ஒப்பனாக கூறிய சீரியல் நடிகர்..

Serials Rachitha Mahalakshmi
By Edward Jul 19, 2022 11:08 AM GMT
Report

சின்னத்திரையில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருகிறவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி - தினேஷ். சரவணன் மீனாட்சி சீரியலில் இருவரும் ஜோடியாக நடிக்க ஆரம்பித்து பின் ஒருசில சீரியல்களில் பணியாற்றி வந்தார். பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் ரக்ஷிதா கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்று கூறப்பட்டது. ரக்ஷிதாவும் தன் பங்கிற்கு சமீபத்தில் நடித்து வரும் சீரியல் காட்சியை போன்று தான் என் வாழ்க்கையும் என்று சோகத்துடன் ஒரு பதினை பகிர்ந்தார்.

இதனால் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் ரக்ஷிதா ஒரு இயக்குனரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது.

விவாகரத்து செய்து இரண்டாம் கல்யாணமா? மனைவியுடன் சண்டையை ஒப்பனாக கூறிய சீரியல் நடிகர்.. | Dhinesh Clarifies Rumours About His Wife Rachitha

பிரிந்து வாழ்வது உண்மை

இதுகுறித்து பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில், என்னைவிட தைரியசாலி தான் அவங்க.

சமீபகாலங்களாக அசாதாரணமான நாட்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம். சமுக ஊடகத்தில் பரவு செய்திகளை நான் புறந்தள்ளிவிடுகிறேன். வெறும் காசுக்காகவும் லைக்ஸ்-க்காகவும் இப்படியான செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள்,

அப்படியே பண்ணிட்டு போகட்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் ரக்ஷிதா இரண்டாம் திருமணம் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு தினேஷ், எங்கள் இருவருக்குமான இடைவெளியும் பிரிவும் தற்காலிகமானது தான்.

விவாகரத்து செய்து இரண்டாம் கல்யாணமா? மனைவியுடன் சண்டையை ஒப்பனாக கூறிய சீரியல் நடிகர்.. | Dhinesh Clarifies Rumours About His Wife Rachitha

இரண்டாம் கல்யாணமா?

இடையில் ஏற்பட்ட சண்டையால் சிலர் தனித்தனியாக வாழ்வார்கள். அப்படி தானே தவிர நானோ ரக்ஷிதாவோ சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிமிடம் வரை எல்லா பாரத்தையும் காலத்தின் மீது போட்டு பேசாம இருக்க வேண்டிய சூழலுக்கு மாத்திக்கிடனும் என்று தினேஷ் கூறியுள்ளார். அப்படி என்றால் சண்டையில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவது உண்மை என்று மறைமுகமாக ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் கூறியுள்ளார்.