ரஜினிகாந்த் எல்லாம் வேண்டாம், விஜய் மட்டும் போதும்.. பேட்டியில் ஓபன்னாக பேசிய டிடி
Rajinikanth
Vijay
Dhivyadharshini
Actors
Tamil Actors
By Dhiviyarajan
விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யதர்சினி என்கிற டிடி.
இவர் தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
தற்போது இவர் மதகம் என்ற வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார். இதையடுத்து சினிமாவில் முழு கவனம் செலுத்த போவதாக பேட்டியில் ஒன்றில் கூறி இருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட டிடி, தலைவர் ரஜினிக்கு மகளாகவா, இல்லை தளபதிக்கு ஜோடியாக நடிப்பீர்களா என்று தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அவர், தளபதிக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கியூட் அழகு என்றால் அது தளபதி விஜய்தான் என்று கூறியுள்ளார்.