'ஐ லவ் யூ'.. பிக் பாஸில் இருந்து வெளியேறும் போது விஷாலிடம் கூறினாரா அன்ஷிதா.. வைரலாகும் வீடியோ
பிக் பாஸ் 8ல் தர்ஷிகா - விஜே விஷால் இடையே காதல் டிராக் துவங்கியது. ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்த தர்ஷிகா, நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என கூறிவிட்டார்.
இதன்பின் விஜே விஷால், அன்ஷிதாவை காதலிக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல் கடந்த சில தினங்களுக்கு முன், அன்ஷிதா மீது தனக்கு ஒரு ஃபீலிங் இருக்கிறது என்றும் நான் வெளியில் சென்றால் உனக்காக காத்திருப்பேன் எனவும் அன்ஷிதாவிடம் விஷால் கூறினார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி, அன்ஷிதா கிளம்பும்போது விஷால் தனது செயின் ஒன்றை அவரிடம் கொடுத்து 'இதை யாருக்கும் நான் கொடுத்ததில்லை, நான் உனக்காக தருகிறேன்' என கூறினார்.
இதன்பின் விஷாலின் காதில் அன்ஷிதா எதோ கூறியுள்ளார். தனது காதலை தான் விஷாலிடம் அன்ஷிதா கூறியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மேலும் அந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.