கமல் ஹாசன் வாய்க்கூசாமல் சொன்ன பொய்: ஆதாரத்துடன் சிக்கிட்டாரு

Vikram Movie Kamalhaasan BiggBoss Ultimate
By Parthiban.A Feb 27, 2022 10:15 AM GMT
Report

பிக் பாஸ் ஷோ என்றாலே கமல்ஹாசனை தான் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கடந்த ஐந்து வருடமாக ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். டிவி ஷோ மட்டுமின்றி அவர் ஓடிடி exclusive ஆக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவையும் தொகுத்து வழங்க தொடங்கினார்.

ஒரு வாரத்திற்க்கு முன்பு தான் கமல் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார், அதன் பிறகு அவருக்கு கோபத்தில் சிம்புவை தொகுப்பாளராக கொண்டு வந்திருக்கின்றனர்.

BB அல்டிமேட் ஷோவில் இருந்து அவர் வெளியேற காரணமாக கமல் சொன்னது இதுதான்.. 'விக்ரம் பட ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டி இருக்கிறது. மற்ற நடிகர்கள் ஒதுக்கிய தேதியில் கண்டிப்பாக ஷூட்டிங் நடத்த வேண்டி இருக்கிறது. அதனால் தான் பிக் பாசில் இருந்து விலகுகிறேன். ஆறாவது சீசனுக்கு திரும்பி வருகிறேன்' என கமல் கூறினார்.

ஆனால் விக்ரம் படத்தின் ஷூட்டிங் நேற்றே முடிக்கப்பட்டு விட்டது. அதன் போட்டோக்களும் நேற்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. கமல் இதை காரணமாக காட்டி தான் ஷோவில் இருந்து வெளியே போனார், ஆனால் அடுத்த வார எபிசோடு வருவதற்க்கு முன்பே பட ஷூட்டிங் முடிந்துவிட்டது.

கமல் ஏன் இப்படி பொய் சொல்லி விஜய் டிவியை புறக்கணித்தார் என்கிற விவாதம் ரசிகர்கள் மத்தியில் நடந்து வருகிறது. 


Gallery