விஜய் - சங்கீதா மகள் திவ்யா சாஷா யார் பக்கம் தெரியுமா? அவரே போட்ட பதிவு
விஜய் - சங்கீதா
நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்த வழக்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்கள் வேண்டுகோளின்படி வழக்கை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்துவைத்தார். விஜய் - சங்கீதா விவாகரத்து பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும், விவாகரத்து விவகாரம் சென்ற சில தினங்களில் திரிஷாவுடன் விஜய் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்ற விஷயமும் மிகப்பெரியளவில் பேசுபொருளானது.

திவ்யா சாஷா
ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், விஜய்யின் மகள் திவ்யா சாஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரைவேட் அக்கவுண்ட்டாக வைத்திருக்கும் திவ்யா சாஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஜனநாயகன் படத்தின் கண்ணே மணியே கன்னிமையே பாடலுடன் ஒரு பதிவினை போட்டுள்ளார்.
அவர் இப்படியான பதிவினை பகிர்ந்துள்ளதால், திவ்யா யார் பக்கம் என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது. திவ்யா சாஷாவின் பட்டமளிப்பு விழாவில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்பதால் தந்தை ஸ்தானத்தில் மகன் சஞ்சய் தான் தங்கைக்காக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த விஷயம் பேசுபொருளாக குடும்பத்தை பார்க்க தவறுகிறார் விஜய் என்று கூறப்பட்டது.
இதனிடையே திவ்யா சாஷா வெளியிட்டுள்ள இந்த பதிவு, சாதாரண பதிவா? இல்லை சைகையா? என்று பெரும் கேள்வியாக மாறியிருக்கிறது. ஆனால் இந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் திவ்யாவுடையதா இல்லை போலியான கணக்கா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.