மரியாதை இல்லாமல் நடத்துனாங்க! கிறிஸ் கெயிலை இப்படி உட்கார வைக்க இதான் காரணம்!!
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தொடர் ஐபிஎல். இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களை வைத்து நடத்தப்பட்ட இந்த தொடர் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக ஐபிஎல் 2022ன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் பல சர்ச்சையான கருத்துக்கள் ஐபிஎல் நிறுவனத்தின் மீது புகார் வந்தும் வந்தது. அதில் சிறப்பாக ஆட்டம் ஆடிய வீரர்களை 10 அணிகளும் எடுக்காதது தான். கோடிகளில் ஏலம் வாங்கிய வீரர்கள் கூட சிறப்பான ஆட்டத்தை கொடுக்காமல் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது ரெய்னா, கிறிஸ் கெயில் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் எடுக்காமலே வெளியேறினார்கள். ஆனால் நானாகவே தான் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தென்னாப்ரிக்க அணியின் வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.
அவர் கூறியது, கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் நான் சரியாக நடத்தப்படவில்லை. கிரிக்கெட்டுக்காகவும் ஐபிஎல் தொடருக்காவும் இத்தனை செய்தபின்னும் எனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை.
இதனால் தான் இந்த தொடரில் விளையாட தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐபிஎல் தொடரில் பென்களூர் மற்றும் பங்சாப் அணிகாக விளையாட விருப்பமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கிறிஸ் கெயில்.