ட்ரோல் பண்ணா எனக்கு என்ன..இந்த மூஞ்சிய பார்த்துதான் ஆகணும்!! நடிகை சிந்தியா பதிலடி..
தினசரி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த், ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு போன்ற வெற்றிப்படங்கள் மூலம் தனக்கான ஒரு இடத்தினை பிடித்தார். அதன்பின் அவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. இளையராஜா இசையில் சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில் சிந்தியா லூர்தே கதாநாயகியாக அறிமுகமாகி நடிக்கும் தினசரி படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் இணையத்தில் வெளியாகிய நிலையில், கதாநாயகி சிந்தியா லூர்தேவை பலரும் கிண்டல் செய்து வந்தனர். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ல் வெளியானதை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து நடிகை சிந்தியா பேசியுள்ளார். அப்போது பேசிய சிந்தியா, படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறோம் என்றும் படம் நல்லா வந்திருக்கு, பல சீனியர்கள் நடித்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
நடிகை சிந்தியா பதிலடி
மேலும், செய்தியாளர் ஒருவர் உங்களை மோசமாக ட்ரோல் செய்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்ற கேள்வியை கேட்டார். அதற்கு அவர், என்னை ட்ரோல் செய்யும் போது எனக்கு ஜாலியாக இருந்தது. அதை நான் மிகவும் ரசித்தேன். ஏனென்றால் என்னை யார் என்றே தெரியாமல் இருந்தது. அப்போது அந்நேரத்தில் தினசரி படத்தின் பாடல் வெளியாகி எந்தவித ரெஸ்பான்ஸும் இல்லாமல் இருந்தது. நெகட்டிவ் விமர்சனம் வந்தது. அதுபற்றி நான் கவலைப்படவில்லை.
நீங்கள் என் முகத்தை பார்த்துத்தான் ஆக வேண்டும். இந்த படத்தில் நான் கதாநாயகியாக் நடிக்காமல் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்திருக்கலாம். இப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் வேறொரு நடிகையை நடிக்க வைத்திருந்தால், என்னை டம்பி ஆக்கிவிட்டீர்கள் என்றுதான் சொல்லி இருப்பார்.
நான் இந்த படத்தில் டம்மியான ரோலில் நடித்திருக்கிறேன். இதில் எனக்கு வருத்தமே இல்லை, ஹீரோயின் ரோல் நான் டம்மியாக இருந்தாலும் ஒரு தயாரிப்பாளராக நான் வெற்றியடைந்துவிட்டேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான் என்று சிந்தியா லூர்தே தெரிவித்துள்ளார்.