இயக்கியது 12 படம்!! மொத்தம் வசூல் ரூ. 4200 கோடி!! இவர் தான் அந்த இயக்குநர்...

S. S. Rajamouli Tamil Directors Box office
By Edward Aug 07, 2025 02:30 PM GMT
Report

இயக்குநர் ராஜமவுலி

இந்திய சினிமாவில் பல இயக்குநர்கள் தொடர் வெற்றியை கொடுப்பது கிடையாது. ஆனால் ஒருசிலருக்கு மட்டுமே தொடர் வெற்றியை கொடுத்து கோடிக்கணக்கில் பாக்ஸ் ஆபிஸை எட்டுக்கிறார்கள்.

அப்படியான இயக்குநராகவும் பிரமாண்ட இயக்குநராகவும் புகழப்படும் இயக்குநர் ராஜமவுலி. தன் கடின உழைப்பாலும் கற்பனை வளத்தாலும் தென்னிந்திய சினிமாவில் முதல் ரூ. 1000 கோடி வசூலை எட்டியும் ஆஸ்காருக்கு படத்தை கொண்டு சென்றதும் அவர் தான்.

இயக்கியது 12 படம்!! மொத்தம் வசூல் ரூ. 4200 கோடி!! இவர் தான் அந்த இயக்குநர்... | Director 4200 Crore From 12 Films No Flop Movies

கடந்த 2001ல் அவர் இயக்கத்தில் ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தை இயக்கி இருந்தார். ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூலை எட்டியது. அவரது கரியரில் 12 படங்களை இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. ஆனால் 12 படங்களும் ஹிட் என்பது அவரின் சாதனை.

ரூ. 10 கோடி பட்ஜெட்டில் சிம்ஹாரா படத்தை இயக்கி ரூ. 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டினார். 2004ல் நிதின் நடிப்பில் SYE படத்தை இயக்கி மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸை பெற்றார். இதனை தொடர்ந்து சத்ரபதி, விக்ரமர்குடு யாமடொங்கா போன்ற படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கண்டார்.

ரூ. 2400 கோடி

அதன்பின் அவர் கரியரில் விஸ்பரூபம் எடுத்த படம் தான் 2009ல் வெளியான மகதீரா படம். ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலை எட்டியது தமிழில் வெளியான மாவீரன். பின் நடிகர் சுனிலை வைத்து 2010ல் Maryada Ramanna படத்தை இயக்கியும் ஈகா(நான் ஈ) படத்தை எடுத்த பாக்ஸ் ஆஃபிஸில் மிரட்டினார்.

இயக்கியது 12 படம்!! மொத்தம் வசூல் ரூ. 4200 கோடி!! இவர் தான் அந்த இயக்குநர்... | Director 4200 Crore From 12 Films No Flop Movies

பிரபாஸ், ரானா டகுபதியை வைத்து பாகுபலி படத்தின் 2 பாகங்களை இயக்கி உலகளவில் ரூ. 2400 கோடிக்கும் மேல் வசூலை குவித்தார். தென்னிந்திய சினிமாவில் ரூ. 1000 கோடி ஈட்டிய முதல் படமாக பாகுபலி திகழ்ந்தது.

2022ல் ஆர் ஆர் ஆர் படத்தினை இயக்கி 1000 கோடி ரூபாய்க்கும் மேல் பாக்ஸ் ஆஃபிஸ் பெற்றதோடு நாட்டு நாட்டு பாடலுக்கான தேசிய விருதினையும் வென்று அசத்தினார். 12 படங்களை இயக்கிய ராஜமவுலி மொத்தம் ரூ. 4200 கோடிக்கும் அதிகமான பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை ஈட்டி மிரட்டினார். ஃபிளாப் படங்களே கொடுக்காத இயக்குநராக இன்று திகழ்ந்து வருகிறார் இயக்குநர் ராஜமவுலி.