ஹிந்தியில் பேச வேண்டுமா? புரியவேண்டியவர்களுக்கு புரியும்!! கடுப்பான பாலிவுட் நடிகை கஜோல்
நடிகை கஜோல்
பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். கடைசியாக விஐபி 2 படத்தில் வில்லி ரோலில் நடித்திருந்தார். இதனையடுத்து அஜய் தேவ்கனை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயாகியும் நடித்து வருகிறார்.
கஜோல் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால் அவரது மொழி மராத்தியாக இருக்கிறது. பாலிவுட் நடிகை என்றாலும் தன்னுடைய தாய் மொழியையே பேசி வருகிறார்.
மகாராஷ்டிரத்தில் தாய் மொழி மராத்தி என்றாலும் இந்தியின் ஆதிக்கம் அதிகமானதால், மாரத்தி மொழி மெல்ல மெல்ல அங்கு அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
ஹிந்தியில் பேச வேண்டுமா
இதற்கிடையில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கலந்து கொண்டு இந்தியில் பேச மறுத்துள்ள சம்பவம் பாலிவுட்டில் பெசுபொருளாக மாறியிருக்கிறது.
மும்பையில் மகாராஷ்டிர மாநில விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மராத்தியிலும் ஆங்கிலத்திலும் கலந்து பேசிய கஜோலிடம், செய்தியாளர் ஒருவர், இந்தியில் பேசுமாறு கூறியிருக்கிறார்.
இதனால் கடுப்பான கஜோல், இப்போது இந்தியில் பேச வேண்டுமா? புரிந்து கொள்ள விரும்புபவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று பேசியிருக்கிறார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.