கொலை முயற்சியில் ஈடுபட்டு வெட்டு வாங்கிய இயக்குநர் பாலா!! எஸ்கேப் ஆன நண்பர்கள்..
இயக்குநர் பாலா
இயக்குநர் பாலா இயக்கத்தில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வணங்கான் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. பாலாவுக்கு இடையில் பர்சனலாகவும் தொழில்ரீதியாகவும் சில சிக்கல்கள் எழுந்தன.
பாலா நிஜ வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தார். ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான் என்று அவரே கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட பாலா ஒரு கொலை முயற்சியையும் செய்திருக்கிறாராம்.
கொலை முயற்சி
அதாவது சினிமாவுக்கு வருவதற்கு முன் நண்பர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அடிதடிக்கு செல்லும் பழக்கம் வைத்திருக்கிறார். அப்படியொருமுறை, அவரது நண்பரின் காதல் விவகாரம் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நண்பனுடைய காதலியின் உறவினர் ஒருவரை வெட்டிக் கொல்வது என்று பாலாவும் அவரது நண்பர்களும் ஸ்கெட்ச் போட்டு சென்றுள்ளார்கள். ஆனால் கடைசி நேரத்தில் பயம் வந்து அவரது நண்பர்கள் எல்லாம் எஸ்கேப்பாகிவிட்டார்கள். தன்னை வெட்ட வருகிறார்கள் என்று முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நபருக்கும் தெரிந்ததால் அவரும் முன்னேற்பாட்டுடன் வந்திருக்கிறார். நண்பர்கள் எல்லாம் ஓடிவிட, பாலா மட்டும் எதிர் கும்பலிடம் மாட்டிக்கொண்டார். அவரை சுற்றி வளைத்தவர்கள் பனங்கருக்கை கொண்டு சகட்டுமேனிக்கு வெட்டியிருக்கிறார்கள். நல்வாய்ப்பாக அந்த வெட்டுக்கள் பாலாவின் முதுகில் பட அவர் தப்பித்துள்ளார். பின் சிகிச்சை பெற்று மீண்டு வந்ததை தன்னுடைய சுயசரிதையான இவன்தான் பாலா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் பாலா.