இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார். முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி
Bharathiraja
By Karthick Raja
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, புதுமை பெண், முதல் மரியாதை போன்ற பல சிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குநர் பாரதிராஜா.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாரதிராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (10.06.2026) காலை உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் பாரதிராஜா (வயது 84) காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அதிகாலையில் உயிர் பிரிந்தது.
முதல்வர் விஜய், நடிகர் சூர்யா, ராதிகா, சிவகுமார், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அவரது வீட்டிற்கு சென்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.