விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லக்கூடாது!! இயக்குநர் சேரன் போட்ட பதிவு..
முதலமைச்சர் விஜய்
தமிழ் நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில் பல விஷயங்களில் அதிரடி முடிவெடுத்து வருகிறார். அந்தவகையில், முக்கிய இடங்களில் இருக்கும் மதுபான கடைகள் 717ஐ 2 வாரங்களில் மூட உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய்.
பதவி ஏற்ற வேகத்தில் பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கட்டுப்பாடு, மின் விநியோக பில், மதுக்கடைகள் மூடல் என மக்கள் முக்கியமாக அவதிப்படும் விஷயங்களில் அதிரடி முடிவு எடுத்தார். இதுகுறித்து பலரும் முதல்வர் விஜய்யை பாராட்டி வரும் நிலையில், இயக்குநர் சேரன் ஒரு பதிவினை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் சேரன்
அதில், மரியாதைக்குரிய மக்களே, அனைத்து மக்களையும் சேர்த்துதான். கட்சி பேதமின்றி சொல்கிறேன், நீண்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவரை நம்பி ஒரு பகுதி மக்கள் முதல்வர் என வாக்களித்து மறுபகுதி மக்கள் அதற்கு ஆதரவும் தந்து முதல்வர் நாற்காலியில் அமரவைத்தும் பார்த்தாகிவிட்டது.
மக்களும் முழுக்கவே அனைவரும் புதியவர்கள் வேண்டும் என்று தெரிந்துதான் இந்த வாக்கை அளித்துள்ளார்கள். பதவிப்பிரமாணம் முடிந்ததும் விமர்சனங்களை முன் வைக்காமல் வாழ்த்திவிட்டு அமைதி காப்பதே நன்று.

ஜால்ரா போடுறேன்
அதற்குள் தமிழ்த்தாய் பின்னால் போய்விட்டாள், 200 யூனிட் கரண்ட் என்னாச்சு என்று முழங்காமல் கொஞ்சம் வேலை செய்ய விடலாம், தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்தில் விஜய் போடச்சொல்லி இருப்பாரா? 200 யூனிட் ப்ரீ என்பதில் என்ன குளறுபடி இதெல்லாம் முதல்நாளிலேயே கேட்கலாமா? அவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் முறையாக் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்.
விஜய் முழுக்க முழுக்க புதியவர், அவருக்கு இந்த அரசியல் சட்ட திட்டங்கள் நுணுக்கமாக புரிய நாட்கள் எடுக்கும். பொறுத்திருங்கள். அவர் புரிந்து நன்றாக செயல்பட்டுவிட்டால் நல்லதுதானே.
அப்படி இல்லை என்றால் மக்களே புரிந்து மாற்றிவிடுவார்கள் தானே. இதை நான் யாருக்கு ஆதரவாகவும் வாசிக்கவில்லை, இல்லை உடனே விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லக்கூடாது. விருப்பு வெறுப்புகளை துறந்து பொதுவான ஒரு அமைதியான சமூகம் உருவாக வழி அமைப்போம் என்பதற்குத்தான் இந்த பதிவு.
முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகள், நல்ல சமுதாய கட்டமைப்பை உருவாக உங்கள் அர்ப்பணிப்பை தாருங்கள் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் சேரன்.