படத்தில் கைவைத்த பத்திரிக்கையாளருக்கு இப்படியொரு துரோகம்! இயக்குனர் சேரன் செய்த லீலை..

Cheran
By Edward Apr 30, 2022 11:10 AM GMT
Report

சினிமாவில் நட்சத்திரங்களை பற்றி கட்டுரைகளாக எழுதி அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை பத்திரிக்கையாளர்கள் செய்து வருகிறார்கள். அந்தவகையில், தமிழ் சினிமாவில் பல பத்திரிக்கைகளுக்கு கட்டுரை ஆசிரியாராக பணியாற்றியவர் பிஸ்மி.

சமீபகாலமாக சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை யூடியூப் சேனல் மூலம் கூறி வருகிறார். இடையில் பல இணையத்தளத்திற்கு பேட்டியும் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் சித்ரா லட்சுமனன் எடுத்த பேட்டியில் சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதில் எனக்கும் சேரனுக்கும் ஏற்பட்ட மன கசப்பு விசயத்தை பற்றி பகிர்ந்துள்ளார். பாரசீக ரோஜா என்ற படத்தினை இயக்குனர் சேரன் இயக்கவிருந்தார். அப்படத்தினை கதையையே அப்படி நான் எழுதினேன்.

கோவை குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் இப்பயொரு படம் எடுத்தால் பிரச்சனையாகும் என்ற நோக்கில் அப்படி எழுதினேன். இதனால் படத்தில் டிஸ்டிபியூட்டர்கள் பயந்து படத்தினை நிறுத்திவிட்டனர்.

இதனால் கோபமடைந்த சேரன் தினமும் என் வீட்டிற்கு உதவி இயக்குனருடம் பூங்கொத்து கொடுத்து கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த நான் அமைதியாக நடந்து கொண்டே. இதையடுத்து சேரன் கேவளமான ஒரு வேலையை செய்தார்.

நான் எழுதிக்கொண்டிருந்த 15 பத்திரிக்கையை அணுகி அவருக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க என்ற வேலையை பார்த்துள்ளார். இப்படி எம்ஜி ஆர் கூட இப்படி செய்ததில்லை. அதன்பின் பாண்டவர் பூமி படத்தில் தான் மீண்டும் பேச ஆரம்பித்து நண்பராகியோம்.