"எங்கடா அந்த மடப்பய".. சிம்புவை சரமாரியாக தாக்கி பேசிய இயக்குனர் ஹரி
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து தற்போது மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிம்பு.
சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு மிகவும் தாமதமாக வருவார், பல நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பதாக பல சர்ச்சைகள் சிக்கியுள்ளார்.
இவர் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2004 -ம் ஆண்டு வெளியான படம் தான் கோவில். இதில் இப்படத்தில் ஹீரோயினாக சோனியா அகர்வால் நடித்திருப்பார்.
இப்படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு தாமதமாக தான் வருவாராம். இதனால் கோபம் அடைந்த இயக்குனர் ஹரி "எங்கடா அந்த மடப்பய" என தன் உதவி இயக்குனரை அழைத்து இருக்கிறார்.
அப்போது அங்கு வந்த உதவி இயக்குனரை ஹரி திட்டி தீர்த்துள்ளார்.
பக்கத்தில் இருந்த சிம்பு தன்னை தான் மறைமுகமாக திட்டுகிறார் என்று புரிந்து கொண்டு அன்று முதல் ஷூட்டிங்கிற்கு நேரத்தில் வந்தார் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.