அப்பாவை சினிமாவில் இருந்து ஓரங்கட்ட பிளான் போட்ட விஜய்.. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்...

Vijay Gossip Today S. A. Chandrasekhar
By Edward Oct 26, 2022 05:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து தன் உழைப்பால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெறும் வகையில் கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகர் விஜய். சமீபகாலமாக விஜய்க்கும் அவரது அப்பா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை சென்று கொண்டிருப்பது தெரிந்த ஒன்று தான்.

ஆனால் தன் மகனை எங்கயும் விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார் எஸ் ஏ சந்திரசேகர். அப்பா மகன் விவகாரம் என்று கூறியதுடன் தன் வாழ்க்கையில் விஜய் எப்படி கஷ்டப்பட்டான் என்பதையும் கூறி வருகிறார்.

இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்து வரும் எஸ் ரஜேஷ் விஜய் பற்றிய உண்மையை கூறியுள்ளார். 15 வருடங்களுக்கு முன் தன் தந்தை இயக்கத்தில் விஜய் சுக்ரன் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் விஜய் நடிப்பதாக இல்லை. ஆனால் எஸ் ஏ சி கதை சொன்னப்பின் கதை நன்றாக இருந்ததால் அப்படத்தில் நடிக்க 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்துக்கொடுத்திருக்கிறார்.

விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்தப்பின், எஸ் ஏ சந்திரசேகரை இந்த படத்தோடு நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அம்மாவுடன் சேர்ந்து ஜப்பான், சீனா, லண்டன் என்று நாடுகளுக்கு அழைத்து சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இதற்கு எஸ் ஏ சி, சினிமாவில் இருந்தால் தான் எனக்கு உற்சாகமாக இருக்கும். அப்படியில்லை என்றால் சோர்வாகிவிடுவேன் என்று கூறியிருக்கிறாராம். அதன்பின் 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து வருகிறார்.

Gallery