கார்த்தி பட இயக்குனரை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்! பேட்டியால் வெடித்த சர்ச்சை
சினிமா நட்சத்திரங்கள் சகஜமாக பேசும் விஷயங்கள் சில நேரங்களில் பெரிய சர்ச்சையாக வெடித்து அவர்களுக்கு பெரிய backlash வருவதுண்டு. நடிகர் அஸ்வின் மேடையில் ஓவராக பேசியதாக மாதக்கணக்கில் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள். 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன் என அவர் சொன்ன நிலையில் 41வது கதையில் நாங்க தூங்கிட்டோம் என அவர் படத்தை பார்த்துவிட்டு ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் அடுத்து கார்த்தி - ஷங்கர் மகள் நடித்து இருக்கும் விருமன் படத்தின் இயக்குனர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அஸ்வினை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு இயக்குனர் முத்தையாவை நெட்டிசன்கள் அட்மிட் செய்து இருக்கின்றனர் வலைதள வாசிகள்.
"என் பெண்ணை நான் தனியாக சென்று போட்டோ எடுக்க விடமாட்டேன், நான் பழமைவாதிதான். என் பெண்ணை நான் பெண்ணாக தான் வளர்க்க ஆசைப்படுகிறேன்" என தான் முத்தையா கூறி இருக்கிறார்.
Wtf is ponna ponna valakradhu? Imagine someone stopping you from taking pictures of yourself ?. Men really do think that women are some kind of non living thing that they own. https://t.co/SA8BHwjRPa
— ASA (@asa_tamil) January 16, 2022