விஜய் ஒன்றும் சூர்யா அளவுக்கு கூட ஒன்னும் பண்ணலையே- ராஜகுமாரன் விளாசல்
ராஜகுமாரன்
கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாக ஒருவரின் பேச்சு பலரையும் செம டென்ஷன் ஆக்கி வருகிறது. அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகை தேவையானி அவர்களின் கணவர் மற்றும் இயக்குனர் ராஜகுமாரன் தான்.
இவர் எந்த பேட்டிக்கு வந்தாலும் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இயக்குனர்களையும் குறை கூறி கொண்டு, யாருக்கும் ஒழுங்காக படம் எடுக்க தெரியவில்லை என கமெண்ட் அடித்து வருகிறார்.

அதோடு பல நடிகர்களை திட்டியும் வருகின்றார், அதில் விக்ரமிற்கு நடிக்கவே தெரியாது என்று அவர் சொன்ன கமெண்ட் எல்லாம் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது விஜய்யை சீண்டியுள்ளார், அதில் எல்லோருக்கும் வீடு கட்டி கொடுப்பேன் என்றெல்லாம் இப்போது பேசுகிறீர்கள், ஆனால், பெப்சி அமைப்பினர் பலர் வீடு இல்லாமல் இருக்கிறார்கள், முதலில் அவர்களுக்கு வீடு கட்டி தாருங்கள்.
மேலும், சுனாமி வந்த போது எங்கோ இருந்த விவேக் ஓப்ராய் ஓடி வந்து இங்கு கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார், நீங்கள் என்ன செய்தீர்கள், ஏன் சூர்யா எவ்ளோ உதவிகள் செய்கிறார், அவரை விடவா நீங்கள் செய்து விட்டீர்கள் என விளாசி எடுத்துள்ளார்.