பாதி படத்திலேயே ஓடி வந்துவிடலாமா-னு ஆகிடுச்சு.. ஜெயிலர் படத்தை கடுமையாக விமர்சித்த இயக்குநர் ராஜகுமாரன்..
நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ராஜகுமாரன். இதன்பின், விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் போன்ற படங்களை இயக்கினார்.
கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இயக்குநர் ராஜகுமாரன் ஜெயிலர் படம் குறித்து கடுமையாக பேசியிருப்பது படுவைரலாகி வருகிறது.

இதில், "ஜெயிலர் படம் பார்த்தேன், பார்க்கவே கொடுமையா இருந்தது. பாதி படத்திலேயே ஓடி வந்துவிடலாமா-னு ஆகிடுச்சு, சகிக்க முடியவில்லை. இதில் ரூ. 600 கோடி வசூல் பண்ணிவிட்டது என்று சொல்கிறார்கள். நீங்க ப்ளூ பிலிம் எடுத்தா கூடத்தான் நல்ல வசூல் பண்ணும்.
இதில் பார்ட் 2 வேற எடுக்கிறார்கள். அந்த படம் மூலம் ரஜினி மக்களுக்கு என்ன சொல்லிவிட்டார். பணம் வர வேண்டும், சம்பளம் வர வேண்டும், திரையரங்களுக்கு பணம் வர வேண்டும் என்று படங்கள் பண்ணிட்டு இருக்கிறார்" என பேசியுள்ளார்.