இரண்டாம் கல்யாணத்திற்கு ரெடியான சங்கர் மகள் ஐஸ்வர்யா..
ஐஸ்வர்யா ஷங்கர் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்ய போகிறாராம். இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்று இருக்கிறது. இந்த விஷயத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிதி ஷங்கர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தலையை வெளியில் காட்டாமல் இருந்த இயக்குனர் சங்கர் இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். மகள் வாழ்க்கையை இழந்து இருக்க, இன்னொரு மகள் டாக்டர் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடித்து வந்தது இயக்குனர் சங்கருக்கு மனகஷ்டத்தை தந்து வந்ததாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது அதையெல்லாம் மறந்து தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு புது வாழ்க்கையை தேடிக்கொடுத்திருக்கிறார் சங்கர். தருண் என்ற உதவி இயக்குனரை மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்ய நிச்சயத்தார்த்தத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். தற்போது அதிதி சங்கர் வெளியிட்ட ஐஸ்வர்யா மற்றும் வருங்கால கணவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



