இளையராஜாவுடன் சரக்கு விருந்து.. ரஜினிகாந்த் கன்னத்தில் அறைந்த பிரபல இயக்குனர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரம் ஆவார். இவர் குறித்து பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் இதுவரை வெளிவந்துள்ளது.
அந்த வகையில் தற்போது ரஜினிகாந்தை பிரபல இயக்குனர் ஒருவர் கன்னத்தில் அறைந்த விஷயம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வீட்டில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதி ராஜா மற்றும் ரஜினிகாந்த் மூவரும் சரக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சரக்கு விருந்துக்கு ரஜினிகாந்த் தாமதமாக வந்துள்ளார்.
அப்போது இயக்குனர் பாரதிராஜா, ரஜினிகாந்தை பார்த்து 'ஏன் டா தாமதமாக வந்த' என கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்த் பல்வேறு காரணங்களை கூறியுள்ளார். அப்போது திடீரென ரஜினிகாந்தை கன்னத்தில் அறைந்துவிட்டாராம் இயக்குனர் பாரதிராஜா.
அங்கு இருந்த அனைவரும் இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். இதன்பின் குடிப்பதேயே நிறுத்துவிட்டாராம் இளையராஜா. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.