சிம்பு - நயன் தாரா லிப்லாக்!! காரணமே அந்த இயக்குநர் கொடுத்த ஏமாற்றம்தான்.. பிரபலம்

Silambarasan Nayanthara Gossip Today
By Edward Jan 04, 2025 12:30 PM GMT
Report

நயன் தாரா

நடிகை நயன்தாரா குறித்த தகவல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆரம்பத்தில் நடிகர் சிம்பு, நயன் தாரா, ரீமே சென், காதன் சந்தியா நடிப்பில் வல்லவன் படத்தின் போது நடந்த ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் பற்றி பேச்சு தற்போது எழுந்துள்ளது.

இப்படத்தில் நடிகை நயன் தாராவுக்கு நடிகர் சிம்பு லிப்லாக் காட்சி ஒன்றில் நடித்திருப்பார். அந்த காட்சியே அப்படியே போஸ்டரில் பயன்படுத்தப்பட்டது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நந்தவனம் நந்தகுமார், கஜினி படத்தின் கதையை ஏ ஆர் முருகதாஸ் நயன் தாராவிடம் சொன்னபோது இரு கதாநாயகிகளின் கதை என்றும் முதல் ஹீரோயின் பிளாஷ்பேக்கில் வந்து செல்வார் என்றும் இருந்தாலும் உங்களுக்குத்தான் முக்கியத்துவம் என்று நயன் தாராவிடம் கூறி கமிட்செய்துள்ளார்.

வல்லவன் லிப்லாக்

30 நாட்கள் கால்ஷீட் கொடுத்த நயன் தாரா படத்தின் சூட்டிங் 10 நாட்களிலேயே முடிந்துவிட்டது. நயன் தாரா மீண்டும் அழைப்பார்கள் என்று காத்திருந்த நேரத்தில் படத்தின் மொத்த ஷூட்டும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்ததால் நயன் கோபப்பட்டுள்ளார்.

படம் வெளியான போது தான் அசினுக்கான படமாகவும் தன்னை ஜூனியர் நடிகையாக பயன்படுத்திவிட்டார்கள் என்ற கோபத்தில் ஏ ஆர் முருகதாஸ் மீது கடுப்பில் இருந்தார். தன்னை அவர் துணை நடிகை போல் பயன்படுத்திவிட்டார் என்று சிம்புவிடம் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார் நயன்.

இதனால்தான் சிம்பு - நயன் தாரா வல்லவன் படத்தில் லிப்லாக் போஸ்டர் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுதான் சிம்பு - நயன் காதல் மலர காரணமாகியது என்று இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் தெர்வித்துள்ளார்.