கைவிட்ட அஜித், ஜோதிகா!! ஓகே சொன்ன சிம்ரனை பாடாய்படுத்தி ஓடவைத்த பிரபல இயக்குனர்..
தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் கவர்ச்சியான உடலாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தவர் நடிகை சிம்ரன். அப்படி நடிப்பினை பின்னியெடுத்த சிம்ரனின் நடிப்பால் கடும் கோபத்தில் கத்தியிருக்கிறார் ஒரு இயக்குனர்.
எஸ் ஏ சூர்யா, சிம்ரன் நடிப்பில் வெளியான படம் நியூ. எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த இப்படத்தில் ஆரம்பத்தில் அஜித் மற்றும் ஜோதிகா தான் நடிக்க இருந்தனர். ஆனால் சில காரணங்களால் நடிக்காமல் போக சிம்ரனும் அவரும் நடித்தனர்.
எஸ் ஜே சூர்யாவை பொறுத்தவரை நடிப்பு அவர் எதிர்ப்பார்த்த அளவிற்கு பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி நடிக்காத நடிகர் நடிகைகளிடம் கோபத்தை காட்டுவாராம்.
அப்படி நியூ படத்தில் சிம்ரன் ஒரு சீனில் நடித்த போது அவருக்கு நடிப்பு வராமல் பல டேக்குகளை வாங்கி இருக்கிறார். கோபத்தின் உச்சிக்கே சென்ற இயக்குனர் கையில் இருந்த செல்போனை எடுத்து எறிந்திருக்கிறார்.
இதனால் அசிங்கப்பட்டதாக நினைத்து ஷூட்டிங்கில் இருந்து வெளியேறியிருக்கிறார். அதன்பின் உதவி இயக்குனர்கள் சிம்ரனை சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்கள். தற்போது நடிப்பில் அரக்கனாக எஸ் ஜே சூர்யா மாறியிருக்கிறது இதனால் தான்.
You May Like This Video