வாழ்க்கை கொடுத்த அஜித்தை தூக்கி வீசிய இயக்குநர்.. அதுவும் அந்த ஹீரோவுக்காக...
விடாமுயற்சி, குட் பேட் அட்லி
நடிகர் அஜித் குமாரின் இடைவிடாத முயற்சி செய்து அடையும் அவரது விடாமுயற்சிக்கு என்றே எப்போதும் சினிமாத்துறையினராலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருபவர்.
அவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அட்லி போன்ற படங்கள் உருவாகி பல வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கார் ரேஸிலும் பைக் ரைடிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பில்லா படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ஆரம்பம் படத்தில் இணைந்தார் விஷ்ணுவர்தன். அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை இரண்டு மூன்று முறை தவறவிட்டதாக பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
பில்லா 3
ஒருமுறை பில்லா 3 படத்தினை எடுக்க எனக்கு அஜித்திடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் சல்மான் கானுடன் ஒரு படம் எடுக்கும் சூழல் ஏற்பட்டது.
அதனால் அதை வேண்டாம் என்றும் மீண்டும் அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நான் அவரை வைத்து படம் இயக்க தயாராக உள்ளேன் என்று கூறியிருக்கிறார். பில்லா என்ற படத்தின் மூலம் இந்தியளவில் பெரிய இடத்தினை பிடித்தார் விஷ்ணுவர்தன்.

அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கியதே அஜித். அப்படியிருக்கையில் அப்படத்தின் மூலம் பிரபலமாகிவிட்டு தெலுங்கு இந்தி உடன் பழையதை மறந்தது மாதிரி அஜித்தை தூக்கி போட்டுச்சென்றதை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்.
என்னதான் இருந்தாலும் அஜித் பில்லா 3 படத்திற்காக நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கொடுப்பார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        