ரூ. 10 லட்சம் கோடி சொத்து மதிப்பு!! மனைவிக்கு ரூ.112,800 கோடி ஜீவனாம்சத்தை செட்டில் செய்த பில்கேட்ஸ்..

Microsoft Bill Gates Net worth
By Edward Jan 13, 2026 06:30 AM GMT
Report

பில்கேட்ஸ் - மெலிண்டா

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் இறுதியில் செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்னர், ரோரி, போப் என்ற 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

ரூ. 10 லட்சம் கோடி சொத்து மதிப்பு!! மனைவிக்கு ரூ.112,800 கோடி ஜீவனாம்சத்தை செட்டில் செய்த பில்கேட்ஸ்.. | Divorce Settlement Bill Gates Transferred Wife

கடந்த 2000-ம் ஆண்டு பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை இருவரும் இணைந்து ஒரு தனி அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையில் ஆரம்ப சுகாதாரம், கல்லி, பருவநிலை மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது வரை இந்த அறக்கட்டளை தீவிரமாக செயப்பட்டு வருகிறது.

ரூ. 10 லட்சம் கோடி சொத்து மதிப்பு!! மனைவிக்கு ரூ.112,800 கோடி ஜீவனாம்சத்தை செட்டில் செய்த பில்கேட்ஸ்.. | Divorce Settlement Bill Gates Transferred Wife

ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம்

இந்நிலையில், மைக்ரோசாப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ், மனைவி மெலிண்ட்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ. 71,100 கோடி வங்கியிருக்கிறார். 2021ல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சமாக வழங்க ஒப்புக்கொண்டிருந்தார் பில்கேட்ஸ்.

ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கிய நிலையில் இறுதியாக தற்போது ரூ.71,100 கோடியையும் வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ்.