சாண்ட்ரா கார் டாஸ்கில் நடிச்சாங்களோ..யாரு நீ!! கொந்தளித்த திவ்யா..
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்ட்டாகி வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள்.
அனைவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் நடந்து வரும் நிலையில், 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை கானா வினோத் எடுத்து வெளியேறியிருக்கிறார்.

கொந்தளித்த திவ்யா
சண்ட்ரா, பிரஜனுடன் திவ்யாவிற்கு அஃபர் இருக்கிறது என்று வியானாவிடம் சொன்ன விஷயத்தை, இப்போது வியானா திவ்யாவிடமே சொல்லிவிட்டார். இடை கேட்டது கடுப்பான திவ்யா, நேற்று இரவு முழுக்க அழுது கொண்டே இருந்தார். சாண்ட்ராவுக்காக நான் எவ்வளவு சர்ப்போர்ட் செய்தேன், ஆனால் அவங்க இவ்வளவு மோசமா நினைச்சு இருக்காங்க என்று திவ்யா கூறி கதறியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று வெளியான பிரமோ வீடியோவில், பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே சென்றப்பின் சாண்ட்ராவிடம் பேசவே மாடேன், அவங்க என்னை எவ்வளவு மோசமா நினைத்திருக்கிறார்கள் என்று எனக்கு இப்போதுதான் தெரியவந்தது என்று கூறினார்.

நடிச்சாங்களோ
மேலும் மற்றொரு பிரமோவில், சாண்ட்ராவுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், இந்த வார நாமினேஷனில்கூட அவருக்காக நான் மிளகாய் சாப்பிட்டேன், அவங்க எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருக்கணும் என்று நினைத்தேன்.
ஆனால் அவங்க என்னைப்பத்தி இப்படி பேசி இருக்காங்க என்று நினைத்து பார்த்தாலே எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு. கார் டாஸ்க்கில் கூட சாண்ட்ரா நடிச்சாங்களோ? அது நிஜமா இருந்தால் கூட என்னால் நம்ப முடியவில்லை, அவங்க கஷ்டப்படுவாங்கன்னு தெரிஞ்சும் உனக்கு ஒருத்தங்க முதுகுல குத்தமுடியும்னா, யாரு நீ? என்று தான் எனக்கு தோன்றுகிறது என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.