இரண்டாம் கல்யாணத்துக்கு முன்பே கள்ளத்தொடர்பா!! சிவா விசயத்தில் எக்ஸ் மனைவிக்கு பதிலடி கொடுத்த இமான்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் டி இமான் சம்மந்தமான விசயம் நாளுக்கு நாள் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்தார் என்று சொல்ல ஆரம்பித்து அதற்கு அவரது முன்னாள் மனைவி மோகிகாவும் பதிலளித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் என்னையும் இமானையும் சேர்த்து வைக்க முயற்சி செய்ததை தான் துரோகம் என்று கூறினார்.
ஆனால் என்னுடன் விவாகரத்து செய்வதற்கு முன்பே இரண்டாம் மனைவியுடன் தொடர்பில் இருந்து கள்ளக்காதலில் இருந்தார் இமான் என்றும் விவாகரத்தான் பின் ஒருவருடத்தில் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறியிருந்தார்.
பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இமான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். விவாகரத்து செய்த பின் சங்கீதா மற்றும் கிரிஷ் பார்த்து என்னிடம் இரண்டாம் மனைவியை அறிமுகம் செய்ததாகவும் திருமணத்திற்கு முன் சந்தித்தது கிடையாது என்றும் கூறினார்.
என் குடும்பத்தினர் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்ததாகவும் மோனிகா கூறியது எல்லாம் பொய் என்றும் கூறியிருக்கிறார்.
இது தற்போது இணையத்தில் கசிந்து சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு சிவகார்த்திகேயன் என்ன நடந்தது என்று கூறினால் தான் முற்று பெரும் என்று கூறி வருகிறார்கள்.