அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.. உண்மையை உடைத்த நடிகை

Tamil Cinema Gossip Today Tamil Actress
By Dhiviyarajan Jan 13, 2023 12:14 PM GMT
Report

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான '100' என்ற திரைப்படத்தில், முக்கியமான ரோலில் நடித்திருந்தார் நடிகை திவ்யா கௌரி.

சமீபத்தில் பேட்டி அளித்த அவர், "நான் சென்னை பொண்ணு தான். ஆனால் இப்போது பெங்களூரில் வேலை செய்து வருகின்றேன். எனக்கு சினிமாவில் பெரிய இயக்குனருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் அவர்கள் என்னை டெஸ்ட் ஷூட் இருக்கிறது என்று என்னை அழைத்தார்கள்.

அட்ஜஸ்ட்மெண்ட்

நானும் அவர்கள் கூறியவாறு சென்றேன். அப்போது ஒருவர் என்னிடம் இயக்குனர் 'உங்களை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொன்னார்' என கூறினார்.

அந்த நேரத்தில் அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து தான் என்னிடம் பேசுகிறார்கள் என்று எனக்கு புரிந்தது. அவர்கள் சொன்னதிற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதை காரணமாக வைத்து படத்தின் டெஸ்ட் ஷூட் முடிந்த பிறகும், நீங்கள் நிறம் கம்மியாக இருக்கிறீர்கள் என பல்வேறு காரணங்களை கூறி என்னை படத்தில் இருந்து நீக்கினார்கள்.

சின்னத்திரை

வெள்ளித்திரையில் தான் சரியான வாய்ப்பு எதும் கிடைக்கவில்லை அதனால் சீரியல் பக்கம் சென்றேன். அங்கேயும் ஆடிஷன் வர சொல்வார்கள் ஆனால் சிபாரிசு மூலமாக தான் தேர்ந்தெடுகிறார்கள். எங்களை போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை"  என்று உருக்கமாக திவ்யா கௌரி கூறினார.