விஜய் இல்லை அஜித் தான் பெண்களை மதிப்பவர்.. திவ்யா சத்யராஜ் பரபரப்பு பதிவு
திவ்யா சத்யராஜ்
இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ், திவ்யா சத்யராஜ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் சிபிராஜ் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். திவ்யா சத்யராஜ் சமூக சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கொண்டவராக வலம் வருகிறார்.
பரபரப்பு பதிவு
இந்நிலையில், அஜித் மற்றும் விஜய் குறித்து திவ்யா அவரது இணையத்தில் போட்ட பதிவு தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " பிறர் என்னிடம் அஜித் சார் பிடிக்குமா அல்லது விஜய் பிடிக்குமா என கேள்வி எழுப்பினால் நான் எப்போதும் 'எனக்கு அஜித் சார்தான் பிடிக்கும்' என்று கூறுவேன்.
அவர் பெண்களுக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவர். தனது வாழ்க்கையிலுள்ள பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துபவர்.
பெண்களுக்கு எதிரான மிரட்டல்களையோ அல்லது துன்புறுத்தல்களையோ ஊக்குவிக்கும் அல்லது அந்த விஷயம் குறித்து மௌனம் காக்கும் எந்தத் தலைவரும் உண்மையான தலைவர் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.