திரிஷா விட்டா வேறு யார் அண்ணா..அந்த நடிகைகள் இல்லையா? விஜய்யை வம்புக்கு இழுத்த சத்யராஜ் மகள்..
நடிகர் விஜய், ஜனநாயகன் படத்திற்கு பின் தன்னுடைய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் வேலைகளில் முழுவதுமாக ஈடுபடவுள்ளார். வரும் 2026ல் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கவுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும் சிலர் அவரை விமர்சித்தும் வருகிறார்கள்.
திவ்யா சத்யராஜ்
இந்நிலையில் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். சமீபத்தில் திமுக கட்சியில் இணைந்த திவ்யா பலரையும் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய் இன்னும் மக்கள் பணியை செய்யவே ஆரம்பிக்கவில்லை. அவரது கட்சி 2026ல் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவிதமான போட்டியையும் திமுகவுக்கு கொடுக்காது.
ஒரு சினிமாத்துறையை சேர்ந்தவளாக இப்போது பேசுகிறேன். விஜய் இதுவரை தன் படங்களில் எந்த தமிழ் நடிகையை நடிக்க வைத்திருக்கிறார். பிரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி, வாணி போஜன் போன்ற தமிழ் நடிகைகள் மிகச்சிறப்பாக நடிக்கிறார்கள்.
அவர்களை தன் படத்தில் நடிக்க வைக்கலாமே, அதைவிட்டுவிட்டு விஜய் அண்ணா எப்போது தன் படங்களில் வடமாநில ஹீரோயின்களைத்தான் நடிக்க வைப்பார். விஜய் அண்ணா உங்களுக்கு ஜோடியாக நடித்த தமிழ் நடிகைகளில் திரிஷாவைத்தவிர வேறு யார் அண்ணா? என்ற கேள்வியை கேட்டுள்ளார் திவ்யா சத்யராஜ்.