39 வயதில் திருமணம் செய்கிறாரா குத்து ரம்யா? ஆனால் அவர் வைத்த ட்விஸ்ட்
By Parthiban.A
தமிழ் சினிமாவில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. கர்நாடகாவை சேர்ந்த அவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது அவருக்கு 39 வயதாகும் நிலையில் நேற்று அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருந்தார். நேரம் வந்துவிட்டது என அவர் சொன்னதை பார்த்த நெட்டிசன்கள் அவர் திருமணம் பற்றி தான் அறிவிக்கப்போகிறார் என நினைத்தனர்.
அது என்னவாக இருக்கும் என பல்வேறு கணிப்புகன் ரசிகர்கள் கமெண்டில் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது திவ்யா வெளியிட்டு இருக்கும் மற்றொரு பதிவில் தான் மீண்டும் நடிக்க வருவதாக கூறி இருக்கிறார். அது மட்டுமின்றி அந்த படத்தை அவரே தான் தயாரிக்க போகிறாராம்.
திருமணம் பற்றி அறிவிப்பார் என எதிர்பார்த்தவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.