சமந்தாவின் முன்னாள் கணவர் மீது எனக்கு ஈர்ப்பு இருக்கு..ஓப்பனாக பேசிய இளம் நடிகை

Naga Chaitanya Tamil Actress
By Dhiviyarajan Feb 05, 2023 06:56 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை கைப்பற்றியவர் தான் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களின் திருமணம் அதிக நாள் நிலைக்கவில்லை, சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2020 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

சமந்தாவின் முன்னாள் கணவர் மீது எனக்கு ஈர்ப்பு இருக்கு..ஓப்பனாக பேசிய இளம் நடிகை | Divyansha About Her Relationship

மீண்டும் காதலா?

தற்போது நாக சைதன்யா 25 வயதான நடிகை திவ்யன்ஷா கௌஷிக்கை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியானது. இவர்கள் இருவரும் மஜிலி என்ற படத்தில் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் இருவருக்கு இடையே காதல் ஏற்பட்டதாக வதந்திகள் வெளியானது. அவர்கள் டேட்டிங் சென்றதாகவும் செய்தி கசிந்தது.

இந்நிலையில் இது குறித்து பதில் அளித்த திவ்யன்ஷா கௌஷிக், " எனக்கு நாக சைத்னயா மீது ஈர்ப்பு இருக்கிறது. அவர் ஒரு நல்ல நபர். நாங்கள் நட்பு ரீதியாக தான் பழகி வருகிறோம். நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது உங்கள் தப்பு" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  

சமீபத்தில் தமிழில் வெளியான மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷனுக்கு திவ்யன்ஷா கௌஷி ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது . 

சமந்தாவின் முன்னாள் கணவர் மீது எனக்கு ஈர்ப்பு இருக்கு..ஓப்பனாக பேசிய இளம் நடிகை | Divyansha About Her Relationship