முகேஷ் அம்பானியின் சொத்துக்கு நிகரான 'தீபாவளி சேல்ஸ்'!! இத்தனை லட்சம் கோடியா

Diwali India TASMAC
By Edward Oct 23, 2025 02:30 PM GMT
Report

தீபாவளி சேல்ஸ் 2025

இந்தியா முழுவதும் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும் பலரும் இன்று வரை தீபாவளியை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடி இணையத்தில் புகைப்படங்களாக பகிர்ந்து வருகிறார்கள்.

முகேஷ் அம்பானியின் சொத்துக்கு நிகரான

தீபாவளி பண்டிகைக்காக மக்கள் அனைவரும் புது ஆடைகள், பட்டாசு வெடிகள், இனிப்புகள் என வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார். அதேபோல், தமிழ்நாட்டில் மட்டுமே தீபாவளி பண்டிகையின் போது டாஸ்மாக்கில் ரூ.758 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகி சக்கைப்போடு போட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதிலும் தீபாவளியை முன்னிட்டு ரூ. 5.40 லட்சம் கோடிக்கு பொருட்களும், போக்குவரத்து உள்ளிட்ட சேவை துறைகள் மூலம் ரூ. 65 ஆயிரம் கோடிக்கு வருவாய் கிடைத்திருப்பதாக இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்மூலம் தீபாவளி விற்பனை ரூ. 6.5 லட்சம் கோடியை தொட்டதாகவும் சுமார் 87 சதவீத நுகர்வோர் இந்தியாவில் தயாரிப்பட்ட பொருட்களை தேர்ந்ததாகவும் இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கூறியுள்ளார்கள். இது இந்திய வர்த்தக வரலாற்றில் மிக உயர்ந்த தீபாவளி வணிகமாக பதிவாகியுள்ளதாம்.