எங்க போனாலும் பூஜா எப்படி இருக்காங்கன்னு தான் கேக்குறாங்க!! DJ பிளாக் ஓப்பன் டாக்..
DJ பிளாக்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளுக்கு DJ-வாக பணி செய்து பிரபலமானவர் டிஜே பிராக். அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களுக்கு ஏற்றவகையில் பாட்டு போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அப்படி மானசி, பூஜா வெங்கட் உள்ளிட்ட பெண் போட்டியாளர்களுக்கு பயங்கரமான பாட்டுக்களை போட்டு மிகப்பெரியளவில் பிரபலமானார். அதுமுதல் பூஜாவை வைத்து டிஜே பிளாக் காதல் செய்கிறார் என்று சில கருத்துக்களை இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.
சமீபத்தில் டிஜே பிளாக் அளித்த பேட்டியொன்றில், பூஜா வெங்கட் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பூஜா
அதில், உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் முதலில் எப்படி இருக்கீங்க என்று கேட்டுவிட்டு அடுத்ததாக, பூஜா எப்படி இருக்காங்கன்னு தான் கேக்குறாங்க, உண்மையானு வேற கேப்பாங்க.
இதனால் ஒருசில நேரத்தில் கடுப்பாகும், சரியாகிடும். பூஜா பெரியம்மா பண்ணதை குறை சொல்லமுடியாது, நான் செய்ததை ரசித்தார்கள் என்று டிஜே பிளாக் செய்துள்ளார்.