VJ மணிமேகலை அக்கா முன்னாடி பேசவே பயம்!! டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமி...
Zee Tamil
Manimegalai
Dance Jodi Dance
By Jai
டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமி
ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
மிர்ச்சி விஜய், மணிமேகலை தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் பாபா மாஸ்டர், சினேகா, வரலட்சுமி போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.

VJ மணிமேகலை
இந்த வாரம் எபிசோட்டில் போட்டியாளர்கள் தரலோக்கல் ரவுண்ட் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். போட்டியாளராக கலந்து கொண்டு வரும் பஞ்சமி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நிகழ்ச்சியை பற்றிய சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், மணிமேகலை அக்கா முன்னாடி பேசவே பயமா இருக்கும். நான் எது பண்ணாலும், அதை பண்ணி பண்ணி காட்டுவாங்க என்று பஞ்சமி தெரிவித்துள்ளார்.