பெண்களை இழிவுபடுத்தி பதிவு...பதிலளிக்காமல் காரில் ஏறிய ஆ ராசா..

DMK Gossip Today TVK
By Jai May 22, 2026 11:15 AM GMT
Report

ஆ ராசா

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியும் இன்னும் பரபரப்பும் ஓயவில்லை. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது. விசிக, ஐயூஎம்எல் கட்சியும் தவெக அமைச்சரவையில் இடம் பிடிக்க, திமுகவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்களை இழிவுபடுத்தி பதிவு...பதிலளிக்காமல் காரில் ஏறிய ஆ ராசா.. | Dmk A Raja Escape New Reportor For Vck Controversy

இது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா பெண்களை இழிவுபடுத்தி பதிவு ஒன்றினை போட்டது சர்ச்சையானது.

இதனைதொடர்ந்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்த நிலையில், தான் பகிர்ந்த அந்த பதிவினை டெலீட் செய்தார் ஆ ராசா. இருந்தாலும், அவரின் இந்த பதிவினை பல கட்சி தலைவர்கள் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பெண்களை இழிவுபடுத்தி பதிவு...பதிலளிக்காமல் காரில் ஏறிய ஆ ராசா.. | Dmk A Raja Escape New Reportor For Vck Controversy

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இருந்து காரில் ஏறும்போது செய்தியாளர், அந்த பதிவு குறித்து கேள்வி கேட்டுள்ளனர். ஆனால், எதற்கு பதில் சொல்லாமல் வேகமாக காரில் ஏறி சென்றுள்ளார் ஆ ராசா.