நான் தான் அப்பான்னு உறுதியளித்த ரங்கராஜ்!! முதல் மனைவி ஸ்ருதியின் ரியாக்ஷன்..
ஜாய் கிரிஸில்டா
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, கடந்த ஆண்டு மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டதாக திருமண புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

ஏற்கனவே முதல் திருமணம் செய்து அப்பாவான ரங்கராஜ், 2ஆம் திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இதனையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிஸில்டா ஒரு புகைப்படத்தை பகிர்ந்ததோடு, தன்னை ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்தார்.
பல மாதங்கள் போராடி வந்த ஜாய் கிரிஸில்டாவுக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
நான் தான் அப்பா
இதனையடுத்து டிஎன்ஏ டெஸ்ட் அளித்த மாதம்பட்டி தான் கிரிஸில்டாவின் குழந்தைக்கு அப்பா என்று உறுதியானது. இதன்பின் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா பெற்ற குழந்தை தன்னுடைய என்று ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ரங்கராஜின் முதல் மனைவியும் வழக்கறிஞருமான ஸ்ருதி ரங்கராஜ் ஒரு பதிவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ருதி ரங்கராஜ்
அதில், என் குடுபத்தை தவறான குற்றச்சாட்டுகள் மூலம் மிரட்டவோ, அவதூறு பரப்பவோ எந்த முயற்சிகள் நடந்தாலும், என் குழந்தைகளையும், குடும்பத்தையும் காக்கவும், ஆதரிக்கவும் நான் உறுதியாகவும் தளராத மனப்பாங்குடனும் நிற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் ஸ்ருதி.