கோடியில் புரளும் டான்..அசுரன் தனுஷையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக குறுகிய காலக்கட்டத்தில் உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனுஷின் 3 படத்தில் சிறுவயது நண்பராக நடித்து அறிமுகமாகி மெரீனா படத்தில் கதாநாயகனாக நடித்தார். விஜே பணியை பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆரம்பித்து தன் உழைப்பால் ரஜினி முருகன் படத்தின் வெற்றியின் மூலம் கால் பதித்தார்.
இப்படத்தினை தொடர்ந்து, ரெமோ, வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்களில் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்திருந்தார். கடந்த 13 ஆம் தேதி வெளியான இப்படம் அப்பா மகன் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு அனைவரையும் நெகிழவைத்தது.
விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் வெற்றியை கண்ட டான் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த முதல் வாரம் மட்டுமே 50 கோடி அளவில் வசூலித்த டான் இந்த ஆண்டு வசூலில் விஜய் பீஸ்ட், அஜித் வலிமை படங்களுக்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயனின் டான் படம் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போதைய வரையில் நடிகர் தனுஷின் அசுடன் படத்தின் வசூலை மிஞ்சியுள்ளதாம். அதாவது சிவகார்த்திகேயனின் டான் படம் 75 கோடிக்கும் மேல் வசூலித்து அசுரன் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் இந்த மாதத்தில் டான் படம் 100 கோடி வசூலையும் முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது.