இப்படி காப்பி அடிச்சிருக்காரே.. அட்லீ அசிஸ்டென்ட் என நிரூபித்த டான் இயக்குனர்

Sivakarthikeyan
By Parthiban.A Jul 01, 2022 12:32 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சில இயக்குநர்கள் தங்களுக்கு என தனி டிரேட்மார்க் ஆன விஷயங்களை வைத்து இருப்பார்கள். அது போல இயக்குனர் அட்லீ என்றாலே நெட்டிசன்கள் எப்போது அவரை காபி அடித்து படங்கள் எடுப்பதற்காக ட்ரோல் செய்யப்படுவது தான் நினைவுக்கு வரும்.

தற்போது அட்லீயின் அசிஸ்டன்ட் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருக்கும் டான் படம் கடந்த மே 13ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி காப்பி அடிச்சிருக்காரே.. அட்லீ அசிஸ்டென்ட் என நிரூபித்த டான் இயக்குனர் | Don Director Trolled For A Scene Copied

அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பேனரை பார்க்கும் காட்சியை அப்படியே ஹாலிவுட் படத்தில் இருந்து திருடி இருக்கிறார்கள் என ட்ரோல் செய்து வருகின்றனர். I Origins என்ற படத்தில் வரும் ஒரு ஷாட்டை அப்படியே எடுத்து டான் படத்தில் வைத்து இருக்கிறார் சிபி சக்ரவர்த்தி.

அட்லீ அசிஸ்டென்ட் என நிரூபிக்கிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்கின்றனர்.