அஜித்தை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்! அடுத்த டார்க்கெட் தளபதி விஜய் தான்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தினை பிடித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்திற்கு பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் டான். முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் கடந்த மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் முதல் வாரத்திலே பல படங்களின் சாதனையை முறியடித்தது. தற்போது வரை 13 நாட்கள் சென்றுள்ள நிலையில் இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை படைத்துள்ளது.
விஜய் அஜித்திற்கு அடுத்த லிஸ்ட்டில் அசுரன் படத்தின் வசூலையே மிஞ்சி சதம் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் வலிமை படம் USA, UK நாடுகளில் எடுத்த வசூலை டான் படம் முறியடித்துள்ளதாம்.
இதுவரை அனைத்து நடிகர்களின் வசூலை சிவகார்த்திகேயன் முறியடித்து வருவதை போன்று விஜய் வசூலையும் முறியடித்து விடுவார் என்று ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள். இதற்கு காரணம் டான் படத்தின் கதையும் செண்டிமெண்ட் காட்சிகளும் தான் இந்த வசூலை எட்ட முடிந்துள்ளது.