திரிஷா-ன்னா ஓகே!! கமல் ஹாசன்னா வெண்டாம்? நடிக்க பயப்படும் பிரபல இயக்குனர்
இந்திய சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தில் சங்கர் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கமல் ஹாசனுடன் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க ஆசைப்படுவார்கள்.
ஆனால் பிரபல இயக்குனர் ஒருவர் அவரை பார்த்து பயந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். பல காதல் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தினை பிடித்தவர் தான் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தினை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இயக்குவதை தாண்டி நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் கெளதம் வாசுதேவ் மேனன், தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்தபேட்டியொன்றில், லியோ படத்தில் விஜய் மற்றும் திரிஷாவுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் இருப்பதாகவும் அதனை மிகவும் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விக்ரம் படத்தில் தனக்கு கமிஷ்னர் செம்பன் வினோத் கேரக்டர் கதாபாத்திரத்தில் லோகேஷ் கேட்டதாவும் அதில் நடிக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார். இதற்கு காரணம் கமல் ஹாசன் ஒரு ஜீனியஸ் என்றும் நான் தற்போது தான் நடிக்க ஆரம்பித்துள்ளேன்.
அப்படியிருக்க அவருடன் காம்பினேஷனில் நடிக்க அச்சம் ஏற்பட்டதாகவும் அதனால் தான் அவருடன் நடிக்க மறுத்ததாகவும் கூறியிருக்கிறார் கெளதம். மேலும் இனிமேல் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கூட நடிக்க மாட்டேன் என்றும் ஒரு ரசிகனாக அவரை இயக்க ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.