கெட்ட கனவாக தான் இருக்கு.. திரெளபதி படத்தில் நடிகை ஷீலாவை ஏமாற்றிய இயக்குனர் மோகன்!!

Sheela Rajkumar Gossip Today
By Edward Jul 19, 2022 11:49 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ஜி என்பவரால் இயக்கப்பட்டு வெளியான படம் திரெளபதி. நடிகர் ரிச்சர்ட் ரிசி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாகிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரு சமுகத்தினரை இழிவு படுத்தும் வண்ணம் படம் அமைந்திருந்தாலும் சிலரின் எதிர்ப்பையும் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் ஜோதி என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக ஒரு பேட்டியில் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டிக்கொடுத்துள்ளார் ஷீலா.

அப்போது திரெளபதி படத்தின் எதிர்ப்புகள் பற்றிய கருத்தினை கேட்கப்பட்டது. அதற்கு ஷீலா, அப்படத்தில் நடித்திருந்தது ஒரு கெட்ட கனவாக கருதுகிறேன். முழு கதையையும் எனக்கு இயக்குனர் கூறவில்லை. இயக்குனர் வெளிப்படையாக நடிகையிடம் இருந்தால் நல்லது.

அப்படி கதையை கூறியிருந்தால் அது பற்றி நான் படித்து எதிர்கொள்வதற்கு தயாராகி இருப்பேன். அப்போது தான் என்னுடைய வேலை தெளிவாக நான் கூறவும் செய்ய வேண்டுமா என்ற முடிவை எடுப்பேன்.

ஆனால் எனக்கு மிகப்பெரிய படமாக இருந்தது திரெளபதி படம் தான் என்று கூறியுள்ளார். மேலும் படத்தினை பற்றிய அரசியல் எனக்கு தெரியாது எனக்கு அது பேச வராது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஷீலா ராஜ்குமார்.