Dude இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? வசூல் விவரம் இதோ
Pradeep Ranganathan
Box office
Mamitha Baiju
Dude
By Kathick
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய முந்தய இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணைந்தன.
இதை தொடர்ந்து வெளிவந்த Dude படமும் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இப்படமும் 5 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இதனை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில், 12 நாட்களை கடந்திருக்கும் Dude திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 12 நாட்களில் ரூ. 109 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.