மூன்று முறை திருமணம் செய்த ஜெயம் ரவியின் அப்பா, அவரே சொன்ன தகவல்

Jayam Ravi Mohan Raja
By Tony Apr 01, 2024 04:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் மோகன் ராஜா, ஜெயம் ரவி என்ற இரண்டு திறமையான நபர்களை கொடுத்தவர் எடிட்டர் மோகன். அப்பா பெயருக்கு எந்த கலங்கமும் வராமல் இன்று வரை வெற்றி நடைபோடுகின்றனர் அண்ணனும் தம்பியும்.

இந்நிலையில் எடிட்டர் மோகன் பிறப்பால் ஒரு இஸ்லாம் மதத்தை சார்ந்தவராம், அவருடைய மனைவி வரலட்சுமி பிராமினாம். இவர் சிறுவயதிலேயே தங்கவேலு என்பவர் வீட்டில் வளர்ந்தாராம்.

அவர் தான் தன் பெயரை மோகன் என்று மாற்றியதாகவும், தங்கள் திருமணம் 3 முறை நடந்ததாகவும் மோகன் கூறியுள்ளார்.

மூன்று முறை திருமணம் செய்த ஜெயம் ரவியின் அப்பா, அவரே சொன்ன தகவல் | Editor Mohan About His Marriage

மேலும், நான் மதம் விட்டு திருமணம் செய்ததாக பலர் கூறினாலும், உண்மையில் நான் மனம் விட்டு தான் திருமணம் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

மோகன்ராஜா அடுத்து தன் தம்பி நடிக்கவிருக்கும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை தான் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.