மம்மி ரிடன்ஸ் படத்தைபோல் ஒரு பயங்கரம்! ஒரேஒரு புயலால் ஊர் முழுக்க தேள் படை..

egypt mummy scorpions aswan
By Edward Nov 17, 2021 10:00 AM GMT
Report

சினிமாவில் அந்த கால எகிப்து மக்களின் வாழ்க்கையையும் புராணத்தை வைத்து மம்மி என்ற படம் எடுக்கப்பட்டது. படத்தில் பெரிய அளவிலான தேள்களை காமித்து படமாக்கி இருந்து வருகிறார்கள்.

அதேபோல் எகிப்தில் தெற்கு அஸ்வான் பகுதியில் சில தினங்களுக்கு முன் புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்து கஷ்டத்தில் இருந்துள்ளனர் மக்கள்.

இந்நிலையில் இருப்பிடத்தில் ஒளிந்திருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேள்கள் வீதிகளிலும் வீடுகளுக்குள் புகுந்து மக்களை கடித்துள்ளது. இதனால் 500க்கும் மேற்பட்டவர்கள் தேள் கடியால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

இதில் 3 பேர் மரணமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. விடுப்பில் இருந்த மருத்துவர்களையும் பணிக்கு வரக்கூறி சுகாதாரத்துறையினர் உத்திரவிட்டுள்ளனர்.