வைல்டு கார்டில் வந்தாலும் வெயிட்டான சம்பளத்தோடு வெளியேறிய ராணவ் மற்றும் மஞ்சரி.. இவ்வளவா
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ பிக்பாஸ். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் சீசன் 8 தற்போது, இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், போட்டியாளர்களை பைனலுக்குள் குறைக்க வேண்டும் என்பதற்காக மூன்று வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது.
இந்த வார நிகழ்ச்சியில் இருந்து வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த ராணவ் மற்றும் மஞ்சரி இருவரும் எலிமினேட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய, ராணவ் மற்றும் மஞ்சரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சம்பளம்
அதன்படி, மஞ்சரி ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படும் நிலையில், 63 நாட்களுக்கு ரூ. 6 லட்சம் 30 ஆயிரம் சம்பளம் பெற்றிருக்கலாம் எனவும், ராணவ் ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளம் பெரும் நிலையில், ரூ. 7 லட்சம் 50 ஆயிரம் சம்பளம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.