அண்ணே அண்ணேன்னு சொல்வாங்க!! சிவகார்த்திகேயனை தாக்கி பேசினாரா ஈரோடு மகேஷ்

Sivakarthikeyan Gossip Today Actors Erode
By Edward Jul 11, 2025 02:30 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பட்டிமன்றத்தில் சிறப்பாக பேசியும் பிரபலமானவர் ஈரோடு மகேஷ். கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் நடுவராக பல ஆண்டுகள் கலந்து கொண்ட மகேஷ், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை மறைமுகமாக தாக்கி பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

[

ஈரோடு மகேஷ்

அதில், எல்லோரும் கொஞ்சம் பெரிய அளவுக்கு வரவரைக்கும், அண்ணே அண்ணேன்னு நல்லா பேசுவாங்க, அப்புறம் ப்ரோன்னு சொல்லுவாங்க, அதுக்கு அப்புறம் நம்ம கிட்டயே, எப்படி போகுதுன்னு கேப்பாங்க, என்ன இப்பலாம் நல்லா வரலன்னு சொல்லுவாங்க. நான் அப்படியே ஃபிளாஸ்பேக் நினைத்து பார்ப்பேன், நான் அமைதியாக இருப்பேன். அதுதான் நல்லதுன்னு நினைப்பேன்.

தம்பி நல்லா வரட்டும், அவங்க உழைப்பு அவங்க வராங்க, அவங்க வாய் அவங்க பேசுறாங்க, நாம எதுக்கும் கொந்தளிக்கக்கூடாது, அமைதியா இருக்கணும். நான் இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம், எல்லா சூழ்நிலையிலும் மனநிலையை சமமாக வைத்துக்கொண்டாலே டென்ஷனே கிடையாது, இதை நான் நம்புகிறேன்.

எப்பவுமே எல்லா புதிய விஷயத்தையுமே என்னிடம் அப்டேட் பண்ற ராஜுவை பிடிக்கும் என்று பேசியுள்ளார். பன் பட்டர் ஜாம் படத்தின் நிகழ்ச்சியில் கதாநாயகனும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ராஜுவை புகழ்ந்து பேசியிருக்கிறார். ஈரோடு மகேஷ் அப்படி பேசியது சிவகார்த்திகேயனை பற்றி தானோ என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.