நடிகை செளந்தர்யா இறக்கும்போது சொத்து எவ்வளவு தெரியுமா? உயில் எழுதி வைத்தாரா?
தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை செளந்தர்யா ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கடந்த 2004 ஏப்ரல் 16 ஆம் தேதி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

தன்னுடைய சகோதர் அமர்நாத்துடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெங்களூரு சென்றபோது தெலுங்கானா, கரீம்நகரில் செளந்தர்யா பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதால் சம்பவ இடத்திலேயே செளந்தர்யா உயிரிழந்தார். விமான விபத்து நடந்து 22 ஆண்டுகளாகிவிட்டது. அப்போது அவருக்கு 31 வயது இருக்கும்.
சொத்து மதிப்பு
இந்நிலையில் செளந்தர்யா இறந்தபோது அவருக்கு எவ்வளவு சொத்து மதிப்பு இருந்தது என்ற தகவல் வெளியாகி விவாதப்பொருளாகியுள்ளது. செளந்தர்யா இறக்கும்போது அவரிடம் ரூ. 100 கோடி வரை சொத்துகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை சினிமா மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் மூலம் சேர்த்திருக்கிறார்.

இருந்தாலும் செளந்தர்யாவின் மரணத்திற்க்குப்பின் அவரது சகோதரரின் மனைவி அந்த சொத்துக்களுக்காக நீதிமன்ற சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மறுப்பக்கம் செளந்தர்யாவின் கணவரும் தன் மனைவியின் சொத்துக்களுக்காக கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தன் மரணத்திற்கு முன் தன்னுடைய சொத்துகள் குறித்து ஒரு உயிலை எழுதியிருந்தாராம். அந்த உயில் இதுவரை ஒரு ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறதாம். ஆனால், யார் பெயரில் உயில் எழுதி வைத்தார் என்பது குறித்த தகவல் இல்லை.