ஒரு பொண்ணு சொல்லிட்டா, எல்லாரும் நம்பிருவீங்களா. எரும சாணி விஜய் பதிலடி

Youtube
By Tony Apr 27, 2026 03:30 PM GMT
Report

எரும சாணி விஜய்

எரும சாணி விஜய் தமிழ் யுடியூப் உலகில் மிகவும் பேமஸ் ஆனவர். இவர் நடத்தி வந்த எரும சாணி யுடியூப் சேனல் மூலம் செம பேமஸ் ஆனவர்.

இவர் வீடியோக்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தது, யுடியூப்-லிருந்து வெள்ளித்திரை, வெப் சீரிஸ் என இந்த டீம் கலக்கி வருகின்றது.

ஒரு பொண்ணு சொல்லிட்டா, எல்லாரும் நம்பிருவீங்களா. எரும சாணி விஜய் பதிலடி | Erumasani Vijay Open Talk

இந்நிலையில் விஜய் ரிசார்ட் என்ற வெப் சீரியஸில் நடித்து வருகின்றார், அதில் அனுராகா என்பவர் நடித்து வந்தார்.

விஜய் விளக்கம்

அனுராகா நேற்று, எனக்கு நடித்ததற்கு பணம் தரவில்லை, விஜய் வேலையும் தரமறுக்கிறார், என்னை ஏமாற்றிவிட்டனர் என கடுமையாக குற்றம்சாட்டினார்.

இதை தொடர்ந்து விஜய் இரண்டு நாட்கள் கழித்து மௌனம் கலைத்துள்ளார், அதில், ஒரு பெண் என்ன சொன்னாலும் நம்பி விடுவீர்களா?, நான் ஆடிஷன் போதே அந்த பெண்ணிடம் சொல்லிவிட்டேன்.

இந்த கதாபத்திரம் இப்படிதான் இருக்கும் என்று, அதுமட்டுமில்லாமல் ஒரு ரூபாய் மிச்சம் வைக்காமல் தயாரிப்பு நிறுவனம் பணம் கொடுத்துவிட்டது, அதற்கு சான்று என்னிடம் உள்ளது.

மேலும், தயாரிப்பு நிறுவனத்திடம் அந்த பெண் ரூ 25 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார், அது இல்லை என சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்? என கோபமாக விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.