சீரியலில் ஆளே காணோம்..ஆனா கிளாமர் ரீல்ஸ்!! எதிர்நீச்சல் தொடர்கிறது அறிவுக்கரசி வீடியோ..
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று டாப் 5 இடத்தில் இருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
காயத்ரி ராணி
இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி ராணி. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக சீரியலில் ஆளே காணாமல் இருந்தார். அறிவுக்கரசி என்ற வில்லி ரோலில் நடித்த் காயத்ரி, கடைசியாக காயத்ரி ராணியின் அப்பா இறந்துவிட்டதால், குணசேகரன் வீட்டிலிருந்து வெளியேறுவது போல் காட்டப்பட்டது.

அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் சீரியல் பக்கமே வரவில்லை. சீரியல் ஷூட் இல்லாததால் இன்ஸ்டாகிராம் பக்கம் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
கிளாமர் ரீல்ஸ்
தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ள காயத்ரி ராணி ஏய் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா என்ற பாடலுக்கு ரொமாண்டிக், கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார்.